உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு திட்ட வீடு கலெக்டரிடம் மனு

அரசு திட்ட வீடு கலெக்டரிடம் மனு

விழுப்புரம்: கோலியனுார் அருகே பனங்குப்பம் தோப்பு காலனியில் கலைஞர் கனவு இல்லம் தேர்வு செய்த பட்டியலை ரத்து செய்து தகுதியானோருக்கு வீடு வழங்கக்கோரி, அப்பகுதி இளைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மனு விபரம்:கோலியனுார் அடுத்த பனங்குப்பம் தோப்பு காலனியில் கலைஞர் கனவு இல்லம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அரசு ஊழியராக இருப்போரும், நிலம் வசதியுள்ளோர் மட்டுமே தேர்வு செய்து இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளனர்.தகுதியானவர்களுக்கு முறைப்படி அரசு தொகுப்பு வீடு வழங்கிட வேண்டும். ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் வழங்குவதோடு, முறைகேடான பட்டியலை வெளியிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ