உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

விழுப்புரம்; அரும்பட்டு ஊராட்சியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.விழுப்புரம் அருகே அரும்பட்டு ஊராட்சியில், தமிழக அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடந்தது. அதில், முதல்வரின், 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், 'மக்களைதேடி மருத்துவம்” ,'இல்லம் தேடிக் கல்வித்திட்டம்” 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” ,'புதுமைப்பெண் திட்டம்” 'தமிழ்ப்புதல்வன் திட்டம்” ,'மகளிர் உரிமைத் திட்டம்” ,'களஆய்வில் முதலமைச்சர்” திட்டம், 'மக்களுடன் முதல்வர்” திட்டம், உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. பொது மக்கள் பலர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ