உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோட்டக்குப்பம் அருகே ராட்சத அலையில் சிக்கி பைபர் படகு சேதம்; மூவர் காயம் 

கோட்டக்குப்பம் அருகே ராட்சத அலையில் சிக்கி பைபர் படகு சேதம்; மூவர் காயம் 

கோட்டக்குப்பம் : கோட்டக்குப்பம் அருகே ராட்சத அலையில் பைபர் படகு சிக்கி கவிழ்ந்ததில் மூன்று மீனவர்கள் காயமடைந்தனர்.கோட்டக்குப்பம் அடுத்த மீனவ பகுதியான நடுக்குப்பத்தை சேர்ந்த அய்யப்பன், 35; பைபர் படகு வைத்துள்ளார். இவர் தனது பைபர் படகில், அதே பகுதியை சேர்ந்த தேசப்பன், 29; விஜயக்குமார், 32; ஆகியோருடன் நேற்று மாலை மீன்பிடிக்க சென்றுள்ளார்.கரையில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில், ராட்சத அலை வந்ததில், மூவரும் சென்ற படகு சிக்கிக்கொண்டது. படகின் முன் பகுதி சுமார் 20 அடி உயரத்திற்கு மேலே சென்றதால் அதிர்ச்சி அடைந்த, மூன்று மீனவர்களும் படகிலேயே தத்தளித்தனர். அலையில் சிக்கியதால் இஞ்சினும் பழுதானது. படகின் இன்ஜின் திடீரென நின்றதாலும் படகை இயக்க முடியாமல் மீனவர்கள் திணறினர். பின்னர் மூவரும் கடலில் விழுந்து, நீந்திய படியே கரைக்கு வர முயன்றனர். அவர்களை மீனவர்கள் கயிற்றின் மூலம் கரையேற்றினர். இதில், மூன்று பேருக்கும் கால்களில் காயம் ஏற்பட்டது. அவர்களை சக மீனவர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை