கிரிக்கெட் போட்டிக்கு வீரர்கள் தேர்வு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட கிரிக்கெட் போட்டிக்கான விளையாட்டு வீரர்கள் தேர்வு நடந்தது.விழுப்புரம் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில், 14, 16 வயதிற்கு உட்பட்ட வீரர்களுக்கான தேர்வு நடந்தது. செஞ்சி, விக்கிர வாண்டி, விழுப்புரம், திண்டிவனம், மயிலம், வானுார், மரக்காணம் பகுதிகளை சேர்ந்த 80 பேர் பங்கேற்றனர். காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தேர்வு நடந்தது. இதில், முதற்கட்டமாக 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட துணை செயலாளர்கள் ரமணன், மதிவாணன், துணை தலைவர்கள் முரளி, சண்முகவேல், தேர்வுக்குழு உறுப்பினர்கள் மணிவேல், பாலதண்டாயுதபானி நடுவர்களாக பங்கேற்று தேர்வு செய்தனர்.வீரர்களின் பேட்டிங் திறமை, பந்து போடும் முறை வைத்து நடுவர்கள் தேர்வு நடந்தது. மாவட்ட கிரிக்கெட் சங்கம் மூலம் தேர்வு செய்யப்படும் வீரர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளனர். இன்று 14ம் தேதி விழுப்புரம் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் காலை 9.00 மணிக்கு, 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு நடக்கிறது. தேர்வாகும் வீரர்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை வயதிற்கு உட்பட்ட பிரிவில் தனித்தனியாக கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.