உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

வானுார் : வானுாரில் பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாமல்லபுரத்தில் வரும் மே மாதம் 11ம் தேதி சித்திரை முழு நிலவு மாநாடு நடக்கிறது. இதையொட்டி, நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாவாடைராயன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் முத்து வரவேற்றனர். செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் ஜெயராமன், வானுார் தொகுதி பொறுப்பாளர் தர்மலிங்கம் சிறப்புரையாற்றினர்.முன்னாள் மாவட்ட தலைவர் ஆறுமுகம், முன்னாள் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் முத்துக்குமார், மாவட்ட பொருளாளர் கவிதா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜி, ரத்தினம்.ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், சுதாகர், கோபால், மகாலிங்கம், முத்து கார்த்திகேயன், சிவசங்கர், பாலு, கோட்டக்குப்பம் நகர செயலாளர் சிவராமன், மாநில சட்ட பாதுகாப்பு குழு துணைச் செயலாளர் ஜெயச்சந்திரன்.ஒன்றிய நிர்வாகி ராமலிங்கம், கிளைச் செயலாளர் வீரபாண்டியன், வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் பிரகாஷ், ஒன்றிய நிர்வாகிகள் அய்யப்பன், தென்னரசு உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், மாமல்லபுரத்தில் நடக்கும் மாநாட்டில் வானுார் தொகுதி சார்பில், ஏராளமான வாகனங்களில் திரளாக பங்கேற்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை