வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திமுக அரசு செய்த மிகப்பெரிய தவறு இதுதான்
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:மழை பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதில் தி.மு.க., அரசு தோல்வி அடைந்துள்ளது. மழையால் ஏற்பட்ட பாதிப்பை விட தி.மு.க., அரசின் அலட்சியத்தால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.நவம்பர் 30ம் தேதியே 117 அடிக்கு மேல் சாத்தனுார் அணை நிரம்பியது. அணையை திறந்துவிட மாநில அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியது. இதை செயல்படுத்தாமல் தமிழக அரசு உறங்கிவிட்டது. அரசு தவறு செய்துவிட்டது என்று குற்றம் சாட்டினால். எச்சரிக்கை செய்து விட்டதாக அரசு தரப்பில் கூறியுள்ளனர். நள்ளிரவில் விடப்பட்ட எச்சரிக்கை மக்களை சென்றடையாததால், மக்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். இதற்கு, தமிழக மக்கள் சரியான நேரத்தில் பாடம் புகட்டுவார்கள். கடை வாடகைக்கு, வாடகைதாரர்களிடம் 18 சதவீத ஜி.எஸ்.டி.,வரி விதிக்கப்படும் என ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த வரி விதிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அகரம்பள்ளிப்பட்டியில் ரூ.16 கோடியில் கட்டப்பட்ட பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். இதனால் 88 ஆயிரம் ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அகவிலைப்படி வழங்க உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இது தொழிலாளர் விரோத போக்காகும்.அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பலவழிகள் உள்ளது. அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்ததை ஏற்க முடியாது. இந்த சம்பவம் மக்கள் கோபத்தின் வெளிப்பாடு என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
திமுக அரசு செய்த மிகப்பெரிய தவறு இதுதான்