உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனத்திலிருந்து மாமல்லபுரம் மாநாட்டிற்கு புறப்பட்ட பா.ம.க.,வினர்

திண்டிவனத்திலிருந்து மாமல்லபுரம் மாநாட்டிற்கு புறப்பட்ட பா.ம.க.,வினர்

திண்டிவனம்: மாமல்லபுரம் மாநாட்டிற்கு திண்டிவனத்திலிருந்து பா.ம.க.,வினர் திரளாக வாகனங்களில் சென்றனர். சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா, மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ம.க.,வினர், வன்னியர் சங்கத்தினர் நேற்று காலை நுாற்றுக்கணக்கான வாகனங்களில் புறப்பட்டனர். திண்டிவனம்-செஞ்சி ரோடு,சந்தைமேட்டிலிருந்து மாநாட்டிற்கு புறப்பட்ட ஊர்வலத்திற்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ம.க.,செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். திண்டிவனம் நகர செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். மாநில சமூக நீதி பேரவை செயலாளர் பாலாஜி, செயற்குழு உறுப்பினர் சுப்பராயலு, மாவட்ட தலைவர் பாவடைராயன், துணை செயலாளர் பால்பாண்டியன்ரமேஷ், கவுன்சிலர் ேஹமமாலினி, முன்னாள் கவுன்சிலர் சவுந்தர், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சம்பத், நகர வன்னியர் சங்க செயலாளர் ரவி, செயற்குழு உறுப்பினர் நல்லாவூர் ராஜீ, சிறுபான்மை அணி சஞ்சியப்பா, பிச்சைமுகமது, வழக்கறிஞர்கள் விஜி, ராகவன், தயாளன், எம்.ஜி.ஆர்.நகர் ரமேஷ், கமிட்டி செந்தில், இலக்கிய அணி பொன்மொழி, கிளை செயலாளர் அக்னி முருகன், மகளிர் அணி குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை