உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நடிகருடன் செல்பி போலீசார் ஆர்வம்

நடிகருடன் செல்பி போலீசார் ஆர்வம்

விழுப்புரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நடிகருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் மிஸ் திருநங்கை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பங்கேற்றார்.இவர், காரில் இருந்து இறங்கி மேடைக்கு வருவதற்கு முன், அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் பலரும், நடிகர் விஷாலோடு நின்று செல்பி எடுத்து கொண்டனர்.இதனால், நடிகரை காண கூட்ட மேடையை சூழ்ந்து நின்று கொண்டதால், நடிகர் விஷாலால் மேடைக்கு வர முடியவில்லை. இதையடுத்து, கூட்டமைப்பு நிர்வாகிகள், மைக் மூலம், 'போலீசார் பாதுகாப்பு பணியில் தயவு செய்து ஈடுபடுங்கள்' என கேட்டுக் கொண்டனர்.அதனைத் தொடர்ந்து, போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி, நடிகர் விஷாலை மேடைக்கு ஏற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை