மேலும் செய்திகள்
அம்பேத்கர் நினைவு தினம்: கட்சியினர் மரியாதை
07-Dec-2024
திண்டிவனம் : திண்டிவனத்தில் தி.மு.க., வி.சி., கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியில், அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அங்குள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தி.மு.க.,சார்பில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சேகர், நகர செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ரமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதேபோல் வி.சி., மாவட்ட செயலாளர் தீலிபன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தாலுகா அலுவலகம் எதிரில் அம்பேத்கர் படத்திற்கு முன்னாள் வி.சி., மாவட்ட செயலாளர் சேரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.கோர்ட் வளாகத்தில் அம்பேத்கர் படத்திற்கு பார்கவுன்சில் உறுப்பினர் கோதண்டம் தலைமையில் வழக்கறிஞர்கள் விஜயன், சேகர், தயாளன் உள்ளிட்ட பலர் மலர் துாவிமரியாதை செலுத்தினர்.
07-Dec-2024