உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழா கொண்டாட்டம்

விழுப்புரம்; விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழுப்புரம் மாவட்ட அரசு அலுவலகங்களில், தமிழர் திருநாளான பொங்கல் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. இதன்படி, விழுப்புரம் தாலுகா அலுவலக வளாகத்தில் முழு கரும்பு வைத்து, மாவிலை தோரணம் கட்டி, புதுப்பானையில் அரிசி பொங்கல் வைத்து, பாரம்பரிய முறைப்படி விழா ஏற்பாடுகளை செய்தனர். நிகழ்ச்சிக்கு, தாசில்தார் கனிமொழி தலைமை தாங்கினார். தலைமை இடத்து துணை தாசில்தார் முருகன், மண்டல துணை தாசில்தார்கள் குணசேகரன், வினோத்குமார் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி, ஊழியர்கள் அனைவரும் பொங்கல் வைத்து வழிபட்டனர். நிறைவாக பாரம்பரிய முறைப்படி, திருஷ்டிக்காக கல்யாண பூசணிக்காய் சுற்றி உடைத்தனர். இதில், வருவாய் ஆய்வாளர்கள் கதிர்வேல், உமாமகேஸ்வரி, சத்தியபாமா, ஜெமீனா மற்றும் வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள், அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ