மேலும் செய்திகள்
ஆட்டோ ஓட்டி அசத்தும் பெண்
18-Nov-2024
விழுப்புரம்: விழுப்புரத்தில் அஞ்சல் துறை சார்பில், ஆட்டோ டிரைவர்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு அட்டை வழங்கும் முகாம் நடந்தது.விழுப்புரம் கோட்ட அஞ்சல் துறை சார்பில், விழுப்புரம் ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநர் சங்கம் இணைந்து, ஆட்டோ டிரைவர்களுக்கான 10 லட்சம் ரூபாய்க்கான காப்பீடு அட்டை வழங்கும் முகாம் நடந்தது.இந்தியா போஸ்ட் வங்கி சார்பில், ஆட்டோ டிரைவர்கள் ஆண்டுக்கு 559 ரூபாய் பிரீமியம் செலுத்தினால், 10 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு வழங்கும் திட்டத்தில், காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் முருகன், செயலாளர் சுரேஷ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் 50 பேர் பங்கேற்றனர். விழுப்புரம் அஞ்சலக அலுவலர்கள் அஞ்சல் துறையின் விபத்து காப்பீடு குறித்து விளக்கினர்.
18-Nov-2024