உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விஜயை கைது செய்ய வலியுறுத்தி போஸ்டர்

விஜயை கைது செய்ய வலியுறுத்தி போஸ்டர்

விழுப்புரம்; த.வெ.க., தலைவர் விஜயை கைது செய்யக்கோரி, விழுப்புரத்தில் தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கரூரில், கடந்த 27ம் தேதி இரவு த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், த.வெ.க., தலைவர் விஜயை கைது செய்யக்கோரி, விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகரில் தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி