உள்ளூர் செய்திகள்

பிரதோஷ பூஜை

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த சித்தாத்துார் ஊராட்சியில் அமைந்துள்ள வயலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜைகள் நடந்தது.முன்னதாக அறிவுடைநாயகி சமேத பாலேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று மாலை 5:30மணிக்கு பிரதோஷகால சுவாமிகளுக்கு அபிஷேகமும்,சிறப்பு தீபாரதனையும் நடந்தது. பின் சுவாமி கோவில் உட்பிரகார உலா நடந்தது. திருத்தல இசைக்குழுவினர் இசையுடன் தேவாரப் பஜனைப் பாடல்கள் பாடப்பெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும்,ஊர்பொதுமக்களும் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ