மேலும் செய்திகள்
பிரதோஷ வழிபாடு
16-Sep-2024
கண்டாச்சிபுரம், : கண்டாச்சிபுரம் அடுத்த சித்தாத்துார் ஊராட்சியில் அமைந்துள்ள வயலீஸ்வர்ர கோவிலில் பிரதோஷகால பூஜை நடந்தது.அதனையொட்டி நேற்று காலை அறிவுடைநாயகி சமேத வயலீஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் நந்திபகவானுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, கோவில் வயலீஸ்வரர் சுவாமி உட்பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தல இசைக்குழுவினர் இசையுடன் தேவாரப் பாடல்கள் பாடப்பெற்றன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
16-Sep-2024