சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு
விழுப்புரம் : திண்டிவனத்தில் கஞ்சா குற்றவாளிகளை பிடித்த சம்பவத்தில், சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.திண்டிவனம் அருகே கொணக்கம்பட்டு பகுதியில், நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் இருந்த போலீசார், நேற்று முன்தினம் சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்து, அதிலிருந்த கஞ்சா மற்றும் 9 போதை மாத்திரைகளை கைப்பற்றி, குற்றவாளிகளையும் கைது செய்தனர்.இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட திண்டிவனம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பலராமன், ஏட்டுகள் மணிகண்டன், ராமமூர்த்தி ஆகியோரை, எஸ்.பி., சரவணன், நேற்று நேரில் அழைத்து பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கினார்.