நீரில் மூழ்கி ஆசாரி பலி
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே மொபெட்டில் வேகமாக சென்றவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.செஞ்சி, வல்லம் அடுத்த அருகாவூரைச் சேர்ந்தவர் அகத்தீஸ்வர், 60; ஆசாரி. இவர் நேற்று அதிகாலை 5:45 மணிக்கு கொத்தமங்கலத்தில் ஒரு வீட்டில் வாசற்கால் வைக்க தனது டி.வி.எஸ்., மொபெட்டில் சென்றார். நல்லாளம் அருகே வளைவில் வேகமாக திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த மொபட் சாலையோரம் நிலத்தில் தேங்கியிருந்த நீரில் விழுந்தார். இதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே அகத்தீஸ்வர் இறந்தார்.பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.