மேலும் செய்திகள்
வேலைவாய்ப்பு முகாம்
01-Sep-2025
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பாலமுருகன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். இதில், 24 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்தனர். மொத்தம், 203 பேர் பங்கேற்றதில் 5 மாற்றுத்திறனாளிகள் உட்பட 38 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், 12 பேர் இரண்டாம் கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். அப்போது, உதவியாளர்கள் மீனாட்சி, ரேவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
01-Sep-2025