உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

வானுார்:அரசு கலைக்கல்லுாரியில் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 'போதைப்பொருட்கள் இல்லாத தமிழகம்' தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின், ஒரு பகுதியாக கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரைப் போட்டி நடந்தது. இதில் முதலாமாண்டு கணிதத்துறை மாணவி பிரியா, முதலிடம்; மூன்றாமாண்டு ஆங்கிலத்துறை மாணவர் தினேஷ், இரண்டாம் இடம்; இரண்டாமாண்டு தமிழ்த்துறை மாணவி ரூபிகா மற்றும் வணிகவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி ஆனந்தி மூன்றாம் இடம்; என வெற்றி பெற்றனர். கல்லுாரி முதல்வர் வில்லியம் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை போதைப்போருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பாளர் காந்திமதி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !