ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை ஆணவ படுகொலை சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரத்தில் மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அறிவழகன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், துணை செயலாளர் மதன்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், வேலு, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், துணை செயலாளர் தீபன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறையில் வைரமுத்து என்பவரின் ஆணவப் படுகொலை சம்பவத்தை கண்டித்தும், தமிழகத்தில் ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.