உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கண்டன ஆர்ப்பாட்டம்

 கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில் மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிளை செயலாளர் ஸ்ரீதர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சி நிர்வாகிகள் பாபு, வடிவேல், ஏழுமலை, செங்கேணி முன்னிலை வகித்தனர். செந்தாமரைக் கண்ணன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் சுப்ரமணியன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்மாறன், வட்ட செயலாளர் கணபதி உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், கண்டாச்சிபுரம் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றுக் குடிநீர் தினசரி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ