உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழுநோய் பாதித்தவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

தொழுநோய் பாதித்தவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

விழுப்புரம்: கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தொழுநோய் பாதித்தவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு, பொது சுகாதார டாக்டர் நிஷாந்த் தலைமை தாங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் வரவேற்றார். தொற்றுநோய் பிரிவு துணை இயக்குனர் சுதாகர் கலந்துகொண்டு, தொழுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் இலக்குபடி 2030ம் ஆண்டுக்குள், பூஜ்ய தொழுநோய் நிலையை அடைய வேண்டும் என கூறினார்.இந்நிகழ்ச்சியில், 80க்கும் மேற்பட்ட தொழுநோய் பாதித்தவர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. டாக்டர் மரியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ