உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவர்களுக்கு கையேடு வழங்கல்

மாணவர்களுக்கு கையேடு வழங்கல்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வினா-விடை கையேட்டினை எம்.எல்.ஏ., வழங்கினார். பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபு ஜீவானந்தம், துணை சேர்மன் பாலாஜி, நகர யலாளர் நைனா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர் . பள்ளி தலைமை ஆசிரியர் பக்தவச்சலம் வரவேற்றார். விழாவில் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, வினா-விடை கையேட்டினை வழங்கி வாழ்த்தி பேசினார். திட்டக்குழு தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் ஜெயபால், நகர துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், பிரசாந்த், சித்ரா, மாவட்ட தலைவர் அரிகரன், செல்வம், பொருளாளர் பாபுஜி பாண்டியன், இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி, துணை அமைப்பாளர் சிவா, யுவராஜ், மாவட்ட பிரதிநிதி அசோக்குமார், சுதாகர், கவுன்சிலர்கள் கனகா, ஆனந்தி, ரேவதி, சுதா, வெண்ணிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் முரளி கிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை