உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காவல்துறைக்கு 2 அதி நவீன ரோந்து வாகனங்கள் வழங்கல்

காவல்துறைக்கு 2 அதி நவீன ரோந்து வாகனங்கள் வழங்கல்

விழுப்புரம்,; விழுப்புரம் மாவட்ட காவல் துறைக்கு, தமிழக அரசால் 2 அதி நவீன ரோந்து வாகனம் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்த வாகனங்களை எஸ்.பி., சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், அவர் கூறுகையில், 'இந்த வாகனத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய நான்கு பக்க கேமராக்கள், ஆடியோ, வீடியோ, ஒலிபெருக்கியும் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு முதல் நிலைக் காவலர்களுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் இந்த வாகனத்தில் ரோந்து பணியில் நியமிக்கப்படுவர். வாகனம் விழுப்புரம் உட்கோட்டம் மற்றும் கோட்டக்குப்பம் உட்கோட்டங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும். குற்ற சம்பவங்களை தடுக்கவும் குற்றங்களை உடனுக்குடன் கண்டறியவும், இவ்வாகனம் 'க்விக் ரெஸ்பான்ஸ் டீம்' மற்றும் காவலர் அடங்கிய குழுவினர் செயல்படுவர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி