பொது மக்கள் கோரிக்கை
மயிலம்:விழுப்புரத்திலிருந்து திண்டிவனம் செல்லும் ரோட்டில் உள்ள கிராமங்களான கன்னிகாபுரம், கேணிப்பட்டு, தென்பசியார் ஆகிய கிராமங்களில் விழுப்புரத்தில் இருந்து வரும் தனியார் பஸ்கள் நிற்பது இல்லை. இதனால் திண்டிவனம் மற்றும் விழுப்புரம், புதுச்சேரிக்கு செல்லும் கிராம மக்கள் அவதி அடைகின்றனர். அனைத்து தனியார் பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி செல்வதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.