மேலும் செய்திகள்
மயிலம் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு
01-Mar-2025
மயிலம்: மயிலம் பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என அப்பகுதி பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மயிலம் தொகுதியும் அடங்கும். மயிலம், ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடமாக உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தொகுதி மறு சீரமைப்பின்போது, புதிதாக மயிலம் தொகுதி உருவாக்கப்பட்டது.மயிலம் தொகுதியின் தலைமையிடமாக இருந்தும், இந்த ஊர் கிராம ஊராட்சியாகவே இதுவரையில் உள்ளது. மயிலம் தொகுதியில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் இடம் பெறவில்லை. அனைத்து ஊர்களுமே கிராம ஊராட்சியாக அமைந்துள்ளது.எனவே, வளர்ந்து வரும் மயிலம் கிராம ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.மயிலம் ஊராட்சியில் 6,600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் 9 கிராம வார்டுகள் உள்ளது. மயிலம் அருகே உள்ள கொல்லியங்குணம், தென் கொளப்பாக்கம் ஆகிய கிராமங்களை இணைத்து புதிய பேரூராட்சி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த 3 ஊராட்சிகளையும் சேர்த்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும், மயிலம் ஊராட்சியில் மிகவும் பழம்பெருமை வாய்ந்த மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். ஆன்மீக சுற்றுலா தலமாக விளங்கும் மயிலம் பகுதியில், இரண்டு தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகளும் ஒரு பொறியியல் கல்லுாரி மற்றும் இரண்டு தனியார் மேல்நிலைப் பள்ளிகள், அரசு நடுநிலைப் பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது. பத்திரப்பதிவு அலுவலகம், காவல் நிலையம், மின்வாரிய அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள், மயிலத்தில் செயல்பட்டு வருகிறது.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார், சட்டசபையில் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, தமிழக முதல்வரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.இருந்தும், மயிலம் ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மயிலம் பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு, பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
01-Mar-2025