மக்கள் குறைதீர் கூட்டம்
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவுறுத்தலின் பேரில், மாநில நெடுஞ்சாலை பிரிவு, தனி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை விசாரித்து, தொடர்புடைய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். முகாமில், முதியோர் உதவி தொகை, வீட்டுமனை பட்டா, ஆதரவற்றோர் உதவிதொகை, சாதிச்சான்றிதழ் உட்பட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட 592 மனுக்கள் பெறப்பட்டது. இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் முகுந்தன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.