உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொங்கல் விழா கலை போட்டிகள் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

பொங்கல் விழா கலை போட்டிகள் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

விழுப்புரம்: பொங்கல் பண்டிகையையொட்டி 8 பிரிவுகளாக நடைபெறவுள்ள கலை போட்டிகளில் விழுப்புரம் மாவட்ட மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:பொங்கல் பண்டிகையை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கோலம், ஓவியம், புகைப்படம், ரீல்ஸ், பாராம்பரிய உடை, மண்பானை அலங்கரித்தல், செல்பி, ஆவணப்படங்கள் ஆகிய கலை போட்டிகள் நடக்கிறது.இதில், மாணவ, மாணவிகள் உட்பட அனைத்து தரப்பு பொதுமக்களும் பங்கேற்கலாம். பொங்கல் பண்டிகை, தமிழர் மரபுகளை காட்சிபடுத்தும் கோலங்களை போட வேண்டும். உழவர் பொங்கல் திருநாள் பற்றிய ஓவியங்கள் தீட்ட வேண்டும். ஜல்லிகட்டு, பொங்கல் நிகழ்ச்சிகள் பற்றிய காட்சிகள், பாரம்பரிய உடை, பொங்கல் நாட்களில் நடக்கும் நிகழ்வுகள், கால்நடைகள் அலங்காரத்தை புகைப்படமாக எடுத்து அனுப்ப வேண்டும்.நாட்டுப்புற கதைகள், பாடல்கள், சிலம்பாட்டம், கரகம், எறுதழுவுதல், ஜல்லிகட்டு காளை மாடுகளை தயார்படுத்துதலை ஒரு நிமிடத்திற்குள் ரீல்சாக எடுத்து போட்டியில் பங்கேற்கலாம். பாரம்பரிய உடை போட்டியில் 1 வயது முதல் 13 வயது உள்ளோர் மட்டுமே பங்கேற்கலாம்.மண்பானை அலங்கரித்தலில் அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம். செல்பியில், பொங்கல் பானையோடு செல்பி, ஜல்லிகட்டு காளையோடு செல்பி, பொங்கல் நிகழ்ச்சிகளுடன் செல்பி எடுத்து அனுப்ப வேண்டும். தமிழ்நாடு பொங்கல் பண்டிகையை எப்படி சிறப்பாக கொண்டாடுகிறது.ஜல்லிகட்டு விளையாட்டு, ஜல்லிகட்டு காளை குறித்த பதிவுகளை ஆவணப்படமாக வழங்க வேண்டும். இந்த படைப்புகள் வேறு எவராலோ, வேறு எங்கும் இதற்கு முன் பதிவிட்டதாக இருக்க கூடாது. சுயபடைப்பாக இருக்க வேண்டும். போட்டியாளர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து gmail.comமின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ