மேலும் செய்திகள்
மரகதபுரத்தில் தி.மு.க., சாதனை விளக்க கூட்டம்
26-Jun-2025
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பத்தில் நகர தி.மு.க., இளைஞரணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா மற்றும் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.நகர இளைஞரணி அமைப்பாளர் வசந்தராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜெயமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில், விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமைக் கழக பேச்சாளர் அப்துல் வஹாப் அதாயி ஆகியோர் பேசினர்.கூட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் முரளி, ராஜி, ஒன்றிய சேர்மன்கள் வாசன், உஷா முரளி, வானுார் முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, கோட்டக்குப்பம் நகர மன்ற துணைத் தலைவர் ஜீனத் பீ முபாரக், மருத்துவ அணி துணை அமைப்பாளர் வினோ பாரதி, மீனவரணி அமைப்பாளர் மணி மற்றும் நகர நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இளைஞரணி நகர துணை அமைப்பாளர் மன்சூர் நன்றி கூறினார்.
26-Jun-2025