உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விடுபட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் கோரி டி.பரங்கனியில் பொது மக்கள் மறியல்

விடுபட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் கோரி டி.பரங்கனியில் பொது மக்கள் மறியல்

வானுார் : வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி டி.பரங்கனி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்கி வருகிறது. விடுப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் கேட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதே போன்று நேற்று காலை 10;30 மணிக்கு, கிளியனுார் அடுத்த டி.பரங்கனி, குமளம்பட்டு கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொது மக்கள், டி.பரங்கனி-உப்புவேலுார் செல்லும் சாலை சந்திப்பில் ஒன்று திரண்டனர். அப்போது, பக்கத்து கிராமங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. அதே போன்று எங்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கிளியனுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., உமாதேவி விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், வருவாய்த்துறை அதிகாரிகள் விரைவில் விடுபட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்குவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக உறுதி கூறினர். அதை ஏற்று பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை