மக்கள் தொடர்பு திட்ட முகாம்
விழுப்புரம்: சேமங்கலம் கிராமத்தில் வரும் 11ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு; திருவெண்ணெய்நல்லுார் தாலுகா சேமங்கலம் கிராமத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வரும் 11ம் தேதி நடக்கிறது. மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொள்கின்றனர். முகாமின்போது, பொதுமக்களிடம், கலெக்டர் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பொதுமக்கள் மக்கள் முகாமில் கலந்து கொண்டு மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.