பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
கண்டமங்கலம்: பாக்கம் கூட்ரோடு நான் முனை சந்திப்பில் திடீர்சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கண்டமஙகலம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில், 100 நாள் வேலைத்திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கோண்டூர் ஊராட்சியில் பணி வழங்காததை கண்டித்து ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள், 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10;00 மணிக்கு பாக்கம் நான்முனை சந்திப்பில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கண்டமஙகலம் போலீசார் மற்றும் பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.