உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதுச்சேரி மதுபாட்டில் கடத்தியவர் கைது

புதுச்சேரி மதுபாட்டில் கடத்தியவர் கைது

திண்டிவனம்; புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் நேற்று பிற்பகல், மயிலம் அருகே உள்ள பெரும்பாக்கம் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக, புதுச்சேரியிலிருந்து வந்த பஸ்சில் பயணம் செய்தவர்களிடம் சோதனை மேற்கொண் டனர். இதில் பஸ்சில் இருந்த நபர் ஒருவர் புதுச்சேரியிலிருந்து, 20 மதுபாட்டில்களை கடத்தி கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. போலீசார் விசாரணையில் அவர் செஞ்சி வட்டம், கொங்கரப்பட்டு கிராமத்தை சேர்ந்த ரவி, 52 ; என தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி