உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயிலில் தவறி விழுந்த புதுச்சேரி வாலிபர் பலி

ரயிலில் தவறி விழுந்த புதுச்சேரி வாலிபர் பலி

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்த புதுச்சேரி வாலிபர் இறந்தார்.புதுச்சேரி அடுத்த சார்காசிமேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் பாலமுருகன்,39; திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். சபரிமலைக்கு சென்று வந்த இவர், நேற்று முன்தினம் உறவினர்களுக்கு பிரசாதம் வழங்கிவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.இந்நிலையில், விழுப்புரம் அடுத்த பனங்குப்பம் ரயில் பாதையில் நேற்று காலை பாலமுருகன் இறந்து கிடந்தார். விழுப்புரம் ரயில்வே போலீசார், பாலமுருகன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்ததில், புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு ரயிலில் வந்த பாலமுருகன் தவறி விழுந்தது தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ