உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முண்டியம்பாக்கத்தில் ரயில்வே மேம்பாலம்; அதிகாரிகள், எம்.எல்.ஏ., ஆய்வு 

முண்டியம்பாக்கத்தில் ரயில்வே மேம்பாலம்; அதிகாரிகள், எம்.எல்.ஏ., ஆய்வு 

விக்கிரவாண்டி; முண்டியம்பாக்கத்தில் ர யில்வே மேம்பாலம் அமைப்பதற்கான இடத்தை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ., ஆய்வு செய்தனர். முண்டியம்பா க்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு நோயாளி களை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் மற்றும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களையும், கரும்புகளையும் வாகனங்கள் மூலம் முண்டியம்பாக்கம் - ஒரத்துார் சாலையில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட் எண்.117ஐ கடக்க சிரமப்படுகின்றனர். இது குறித்து பொதுமக்கள் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என அன்னியூர் சிவா எம்.எல். ஏ.,விடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் அவ்வப்போது செய்தி வெளியானது. இந்நிலையில், நேற்று மாலை 4:30 மணியளவில் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, நெடுஞ்சாலைத் துறை கடலுார் கோட்ட பொறியாளர் கோதை, உதவி கோட்ட பொறியாளர் ஸ்டெல்லா, உதவி பொறியாளர்கள் வெங்கடேசன், ராதிகா, சாலை ஆய்வாளர் அன்புக்கொடி, சாலை பணியாளர் ஜெயமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் கொசப்பாளையம் பழைய சர்க்கரை ஆலை ரோட்டில் உள்ள ரயில்வே கிராசிங் எண்.116 ல் 0.9. கி.மீ., துாரத்திற்கு ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்தனர். ஒன்றிய செயலாளர்கள் ஜெயபால், முருகன், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், திட்டக்குழு தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசி ஜெயபால், நளினி ஜெயச்சந்திரன். மாவட்ட பிரதிநிதிகள் வேல்முருகன், சுதாகர், ஒன்றிய இளைஞரணி அன்பு, கோபி, ஒருங்கிணைப்பாளர் சுந்தர், மகளிரணி மகேஸ்வரி, மாலதி, நிர்வாகிகள் லட்சுமி நாராயணன், விஜயவேலன், சங்கர், ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை