மேலும் செய்திகள்
திருத்தணியில் மழையால் மூழ்கிய நெற்பயிர்கள்
18-Jul-2025
வானுார்: மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார். வானுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையால், கிளியனுார் அடுத்த உப்புவேலுார், புதுக்குப்பம் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. இந்நிலையில், வானுார் வேளாண் உதவி இயக்குநர் எத்திராஜ், அப்பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, அறுவடைக்கு தயாராக இருந்த, 150 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது தெரிந்தது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆய்வின்போது துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண் அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
18-Jul-2025