மழைக்கு பலி 14 ஆக உயர்வு
விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில், கனமழை பாதிப்பில் சிக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக, கடந்த 30ம் தேதி இரவு தொடங்கி இரண்டு நாள்கள் கனமழை பெய்தது. சாத்தனுார் அணையிலிருந்து, தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் பல கிராமங்களில் புகுந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.இதன்காரணமாக கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி, நேற்று முன்தினம் நிலவரப்படி, இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக இருந்தது. நேற்றைய நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.