உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழைநீர்

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழைநீர்

விழுப்புரம்: காணை அருகே ரயில்வே தரை பாலத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.காணை அருகே கொத்தமங்கலம் கிராம ரயில்வே தரைபாலம்வழியாக, கொத்தமங்கலம், வெண்மணியாத்துார், கோனுார் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு மக்கள் செல்கின்றனர். போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரயில்வே தரைபாலத்தில், மழை காலத்தில் தண்ணீர் அதிகளவு தேங்கி நிற்பது வழக்கம். ஊராட்சி நிர்வாகம் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும்.தற்போது பெய்யும் மழையால், கொத்தமங்கலம் ரயில்வே தரைபாலத்தில் தண்ணீர் குளமாக தேங்கியுள்ளது. இந்த தண்ணீரை ஊராட்சி நிர்வாகம் அகற்ற முன்வரவில்லை. இதனால் தரைப்பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் நீந்தியபடி கிராம மக்கள் வாகனங்களிலும், நடந்து செல்கின்றனர். சில பைக்குகள் தண்ணீரில் சிக்கி பழுதாகி உள்ளது. எனவே, கொத்தமங்கலம் ரயில்வே தரைபாலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ