உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூட்டேரிப்பட்டு சர்வீஸ் சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்

கூட்டேரிப்பட்டு சர்வீஸ் சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்

மயிலம்: கூட்டேரிப்பட்டு மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில், லேசான மழைக்கே குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தடுக்க, மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில், புதிதாக மேம்பாலம் அமைக்கப்பட்டது. மேம்பாலத்தின் பக்கத்திலே சர்வீஸ் சாலைகள் அமைத்தனர். இதில், மேம்பாலத்தின் கிழக்கு பக்க சர்வீஸ் சாலை தாழ்வாக உள்ளது. இதனால் சில நிமிடம் பெய்யும் லேசான மழைக்கு சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்குகிறது.சர்வீஸ் சாலையில் தேங்கும் மழைநீரால், சாலையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே சர்வீஸ் சாலை யில் மழைநீர் தேங்காத வகையில் தேசிய நெடுங்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை