உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரெட் கிராஸ் துவக்க விழா

ரெட் கிராஸ் துவக்க விழா

வானுார்; வானுார் அடுத்த டி.பரங்கனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் துவக்க விழா நடந்தது.தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜெய்சாந்தி தலைமை தாங்கினார். தமிழாசிரியர் சுமதி வரவேற்றார். மாநில பயிற்சியாளர் தண்டபாணி, மாணவர்களுக்கு ஜே.ஆர்.சி., வரலாறு, கொள்கைகள், செயல்பாடுகள் குறித்தும், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் ஏழுமலை, ராமமூர்த்தி ஆகியோர் பள்ளி சார் செயல்பாடுகள் குறித்தும் பேசினர்.ஆசிரியர்கள் வசந்தி, ஜெகஷீஜா, ரேவதி, விஜயகுமார் வாழ்த்திப் பேசினர்.நிகழ்ச்சியையொட்டி, பள்ளியில் வறண்ட நிலத் தாவரங்கள், மூலிகைத் தாவரங்கள் கொண்ட 'தொங்கும் தோட்டம்' அமைக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஜே.ஆர்.சி., ஆலோசகர் இளங்கோவன் செய்திருந்தார். பட்டதாரி ஆசிரியர் சிவராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை