உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சிலுவை சங்கம் நிவாரணம்

செஞ்சிலுவை சங்கம் நிவாரணம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு உதவுவதற்காக, இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில், ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான சமையல் உபகரணங்கள், தார் பாய் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு, கண்டெய்னர் லாரிகளில் நிவாரண பொருட்கள் வந்தடைந்தன. இதனை, விழுப்புரம் மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் திருமாவளன், கூடுதல் கலெக்டர் (பயிற்சி) பிரேமி யிடம் ஒப்படைத்தார். அப்போது, துணை தாசில்தார் வினோத்குமார், ரெட் கிராஸ் செயலாளர் வைத்தீஸ்வரன், ரெட் கிராஸ் நிர்வாகி சிவகங்கா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை