உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீ விபத்தில் நஷ்டம் அடைந்த வியாபாரிக்கு நிவாரண உதவி

தீ விபத்தில் நஷ்டம் அடைந்த வியாபாரிக்கு நிவாரண உதவி

செஞ்சி: செஞ்சியில் தீ விபத்தில் கடை எரிந்து 2 கோடி ரூபாய் நஷ்டமடைந்த வியாபாரிக்கு செஞ்சி நுகர் பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் 1.41 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது.செஞ்சியில் கடந்த 12ம் தேதி இரவு பேன்சி ஸ்டோரில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் ராஜி, பாலாஜிக்கு செஞ்சி தாலுகா நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் நேற்று ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கினர்.நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் மணிகண்டன், வர்த்தகர் சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினர்.துணைத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர்கள் ஜானகிராமன், வெங்கட் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ராஜகோபால், கண்ணன், கார்த்திகேயன், முருகன், சரவணன் சட்ட ஆலோசகர் பாலமுருகன், சபீர் மற்றும் சங்க உறுப்பினர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !