உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிவாரணம்

மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிவாரணம்

விழுப்புரம்: சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை அமைப்பு சக்ஷம் சார்பில் மழையால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் சக்ஷம் சேவை மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி மழை வெள்ளத்தால் பாதித்த மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. சேவா பாரதி தன்னார்வலர்கள் பாஸ்கர், அரிகிருஷ்ணன், வழக்கறிஞர் ரவிக்குமார், சக்ஷம் புரவலர் சந்திரசேகரன், வழக்கறிஞர் ராஜ் நந்தகுமார், சுரேந்தர், செல்வகுமார் உட்பட இ.எஸ்., செவிலியர் கல்லுாரி மாணவர்கள், கல்விக்குழுமம் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ரமேஷ், துணை தலைவர் சதீஷ்குமார், பொருளாளர் பிரபாவதி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை