உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு நிவாரணம்

தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு நிவாரணம்

விழுப்புரம்; வி.பூதுார் கிராமத்தில் தீ விபத்தில் பாதித்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் அடுத்த வி.பூதுார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன், அயோத்தி. இவர்களின் கூறை வீடுகள் எரிந்து சேதமானது. தகவல் அறிந்த விழுப்புரம் தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., நேற்று நேரில் சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, அவர்களுக்கு நிவாரண உதவிகளையும், அரசின் நல உதவிகளையும் வழங்கினார். விழுப்புரம் தாசில்தார் கனிமொழி, வி.ஏ.ஓ., ஜெயராமன், கண்டமங்கலம் தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர பொறுப்பாளர் வெற்றிவேல், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு, சிறுபான்மையினர் அணி தாஹிர், மாவட்ட விவசாய அணி கேசவன், ஒன்றிய துணைச் செயலாளர் பூங்குன்றம், பொறியாளர் அணி குமரன், பிரவீன்ராஜ், ஸ்ரீதரன், முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை