நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே கோர்ட் உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அருங்குறுக்கை கிராமத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து விவசாயிகள் நெல், உளூந்து போன்றவற்றை பயிர் செய்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இதையெடுத்து திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையில் நேற்று அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.