உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோரிக்கை விளக்க கூட்டம்

கோரிக்கை விளக்க கூட்டம்

விழுப்புரம்; விழுப்புரத்தில், அரசு கல்லுாரி ஆசிரியர் மன்ற மாநில பொதுக்குழு கோரிக்கை விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கவுரவ விரிவுரையாளர்கள் சுதாகர், கோவிந்தசாமி உள்ளிட்டோர் கோரிக்கை குறித்து பேசினர். அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அதுவரை யு.ஜி.சி அறிவித்துள்ள அடிப்படை ஊதியமான ரூ.50,000 வழங்க வேண்டும், பி.டி.ஏ., கவுரவ விரிவுரையாளர்கள், மாணவர்களின் கட்டணத்திலிருந்து சொற்ப ஊதியம் பெறும் அவல நிலையை நிறுத்தி, கவுரவ விரிவுரையாளராக நியமித்து, தற்போது அவர்களுக்கு வழங்கும் ரூ. 25000 ஊதியத்தை அரசு வழங்க வேண்டும், பணி அனுபவ சான்று வழங்க வேண்டும் என்று பொதுக்குழு மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை