மேலும் செய்திகள்
பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
29-Oct-2024
2 பேரை கத்தியால் வெட்டியவர் கைது
15-Oct-2024
மயிலம்: மயிலம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகள் சார்பில் வானவில் மன்ற அறிவியல் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கும் போட்டி நடந்தது.மயிலம் வள மையத்தில் நடந்த ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கும் கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர் கோவர்த்தனம் தலைமை தாங்கினார். மயிலம் வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் செந்தில் ராஜா முன்னிலை வகித்தார்.வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியர் தண்டபாணி, கருத்துரையாளர் விஜயலட்சுமி ஆகியோர் மாணவர்கள் ஆய்வு கட்டுரைகள் வழங்குவது முக்கியத்துவம் குறித்து பேசினர். ஆசிரியர்கள் பாலசுப்ரமணிய பாரதி, அருள் நடுவர்களாக செயல்பட்டனர். இந்தப் போட்டியில் 42 அரசுப் பள்ளி மாணவ வர்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
29-Oct-2024
15-Oct-2024