உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில், அரகண்டநல்லுார் காமராஜர் சாலை குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சார்பில் வீட்டுமனைப் பட்டா கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் தனுசு தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், அரகண்டநல்லுார் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். காமராஜ் சலையில் உள்ள பொது இடமானது, பிரிட்டிஷ் காலத்திருந்து தற்போது வரை, அரசு வருவாய் கணக்கில் தரிசு நிலம் என உள்ளது. ஆனால், எவ்வித ஆவணமும் இன்றி, கோவில் நிலம் என உரிமை கொண்டாடுவதை தடுக்க வேண்டும். அரகண்டநல்லுாரில் நீண்டகாலமாக குடியிருந்து வரும் பிற்பட்ட ஏழை மக்களுக்கு, பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி