மேலும் செய்திகள்
ஓய்வு அலுவலர்கள் சங்க கூட்டம்
01-Dec-2024
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுாரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு சங்கத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பொருளாளர் செல்வராஜ் மாத வரவு செலவு அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் குடும்ப ஓய்வூதியர்களை குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தில் இணைத்து அவர்களுக்கு இறப்பு நீதியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பழனிவேல் நன்றி கூறினார்.
01-Dec-2024