உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அடுத்தடுத்து 2 கோவில்களில் திருட்டு

அடுத்தடுத்து 2 கோவில்களில் திருட்டு

திண்டிவனம்: திண்டிவனம் அருகே 2 கோவில்களில் திருடு போனது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.திண்டிவனம் அடுத்த அம்மணம்பாக்கத்தில் முத்துமாரியம்மன் கோவில் பூசாரி அஞ்சலை, 60; நேற்று காலை கோவில் திறக்க வந்தபோது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை மற்றும் அம்மன் கழுத்திலிருந்த கால் சவரன் தாலி திருடு போனது தெரியவந்தது.

மேலும் ஒரு வழக்கு

மேல்ஆதனுார் கிராமத்தில் ஸ்ரீகோடியம்மாள் என்கிற கிராம தேவதை கோவில் தர்மகர்த்தா குமார், 62; நேற்று காலை கோவிலுக்கு சென்று பார்த்த போது, கோவிலின் கிரீல் கேட் உடைக்கப்பட்டு, உண்டியல் உடைத்து திருட முயன்றிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து இருவேறு புகார்களின் பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை