மேலும் செய்திகள்
விவசாயியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
13-Sep-2025
திருவெண்ணெய்நல்லுார்; உளுந்துார்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். உளுந்துார்பேட்டை அடுத்த எம். குன்னத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 50; விவசாயி. இவரது மனைவி ராணி நேற்று முன்தினம் காலை 10:00 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு, நிலத்திற்கு சென்றனர். மாலை 6:00 மணியளவில் இருவரும் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பீரோவில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
13-Sep-2025